பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் இருந்து 300 தமிழர்கள் வருகை

Added : மார் 24, 2020
Share
Advertisement

போத்தனுார்:'கொரோனா' எதிரொலியாக, சொந்த ஊருக்கு செல்ல அறிவுறுத்தியதாக கூறி, கேரள மாநிலத்தில் இருந்து, 300க்கும் மேற்பட்ட தமிழர்கள், நேற்று கோவை வந்தனர்.
தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்துக்கு செல்லும் அனைத்து எல்லைகளிலும், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கோவை வாளையாரில், சுகாதாரம், போலீஸ், போக்குவரத்து மற்றும் வருவாய் துறையினர், 24 மணி நேர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மூன்று நாட்களாக, கோவை நோக்கி வந்த, கேரள பதிவெண் கொண்ட வாகனங்களை திருப்பி அனுப்பினர்.இந்நிலையில், நேற்று, பல்வேறு வாகனங்களில் கோவை நோக்கி வந்த, 300க்கும் மேற்பட்ட தமிழர்களிடம், குழுவினர் விசாரித்தனர். அங்கு பல ஆண்டுகளாக தங்கி பணிபுரிந்து வருவதாகவும், 'கொரோனா' அச்சத்தால், சொந்த ஊர் செல்ல அறிவுறுத்தப்பட்டதாகவும் இவர்கள் கூறினர். இவர்களை சுகாதார துறையினர் பரிசோதித்து, தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான சான்றுகளை சரிபார்த்தனர்.சான்றுகள் சரியாக இருந்தவர்கள் மட்டும், மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, பரிசோதனைக்காக வந்த திருச்சூரை சேர்ந்த கர்ப்பிணியையும், இவருடன் வந்தவர்களையும், போலீசார், சுகாதார துறையினரிடம் ஒப்படைத்தனர். பரிசோதனைக்கு பின், மருத்துவமனை செல்ல அனுமதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X