பொது செய்தி

தமிழ்நாடு

40 எம்.எம்.1  - 23.3.2020

Added : மார் 24, 2020
Share
Advertisement

'மக்கள் டிவி'யின், 'வளாகம்'மக்கள் டிவியில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை, 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் வளாகம் நிகழ்ச்சி, பங்குச்சந்தை தொடர்பான பல கேள்விகளுக்கு, விடை தருவதாக உள்ளது.பங்குச்சந்தை மற்றும் நிதி ஆலோசகர்களான விவேக்கர்வா, தர்மஸ்ரீ ராஜேஸ்வரன், ஜீவா ஆகியோர், நேற்று பங்குச்சந்தை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

இதில், பங்குசந்தையில் உள்ள ஏற்ற இறக்கம், முதலீட்டு நேரம், எத்தனை வகைகள், மார்க்கெட் கிராஸ் சமயம் உள்ளிட்ட பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. பங்குச்சந்தை தொடர்பான விளக்கங்களுக்கு, இந்நிகழ்ச்சி உதவியாக அமையும்.--------கண்டேன் கருணை கடலை!100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து, பூமியில் நல்லொழுக்கத்தையும், பக்தி மார்க்கத்தையும், தான் பூண்ட துறவு வாழ்க்கை மூலம் கற்றுக் கொடுத்து வாழ்ந்தவர் காஞ்சி மஹா பெரியவர். அவரது பயணத்தை, நுால் மூலமாக, 'தெய்வத்தின் குரல்' மூலமாக, நாம் படித்து மகிழ்ந்துள்ளோம்; பின்பற்றி வருகிறோம்.

அவருடன் பயணித்த, அவரை போற்றிக் கொண்டிருக்கும் முக்கிய நபர்களை பேட்டிக் கண்டு, மெய்சிலிர்த்த தருணங்களை நம்முடன் பகிரும் நிகழ்ச்சியே, கண்டேன் கருணை கடலை. புதுயுகம் டிவியில், ஞாயிறு தோறும் காலை, 9:00 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. கர்நாடக இசைக்கலைஞர் விக்கு விநாயக்ராம், பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், மஹா பெரியவருடன் இருந்த வேதபுரி போன்ற பல பிரபலங்கள், காஞ்சி பெரியவரின் அதிசயங்களை நம்முடன் பகிர்கின்றனர். நிகழ்ச்சியை, சாந்தி சுரேஷ் தொகுத்து வழங்குகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X