பொது செய்தி

தமிழ்நாடு

புறநகர் ரயில் பயணியர் கோரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை : 'கொரேனா' வைரஸ் காரணமாக, ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதால், சீசன் டிக்கெட்டின், கால அவகாசத்தை நீட்டிக்குமாறு, தெற்கு ரயில்வேக்கு, புறநகர் ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில், புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்படுகிறது. இவற்றில், தினமும் பல லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.தினமும் ரயிலில் பயணம் செய்யும் பயணியர், மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு காலத்திற்கு, சீசன் டிக்கெட் எடுத்துள்ளனர்.பலர், வரிசையில் நின்று காத்திருக்காமல், யு.டி.எஸ்., எனப்படும் முன்பதிவு இல்லாத டிக்கெட் சேவைக்கான, மொபைல் செயலி வாயிலாக, காகிதம் இல்லாத சீசன் டிக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.தற்போது, இந்தியாவில், ‛கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முதல், இம்மாதம், 31ம் தேதி வரை, அனைத்து ரயில் சேவைகளையும், ரயில்வே அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

இதனால், ரயிலில் பயணம் செய்ய, முன்பதிவு செய்தவர்களுக்கு, முழு கட்டணமும் திரும்ப செலுத்தப்படும் என, ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்கள் ரத்தால், சீசன் டிக்கெட் எடுத்தவர்கள், ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், எத்தனை நாட்களுக்கு ரயில்கள் இயக்கப்படவில்லையோ, அத்தனை நாட்களுக்கு, சீசன் டிக்கெட்டின் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு, பயணியர், தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'இதுகுறித்து, ஆலோசித்து வருகிறோம்; விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X