பொது செய்தி

தமிழ்நாடு

பாதி வழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் சென்னை வந்தன

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை : டில்லி உட்பட, வடமாநிலங்களில் இருந்து இயக்கப்பட்டு, பாதி வழியில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள், நேற்று சென்னை வந்தடைந்தன.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, நாடு முழுவதும், நேற்று முன்தினம் முதல், அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. அனுமதிமார்ச் 21ல் புறப்பட்டு, நேற்று மக்கள் ஊரடங்கு நடத்தியதால், பாதி வழியில் நிறத்தப்பட்டிருந்த ரயில்கள், அவைகள் சென்றடையும் நிலையங்கள் வரை இயக்க அனுமதிக்கப்பட்டது.

இதையொட்டி, 21ம் தேதி, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து புறப்பட்டு, பாதி வழியில் நிறுத்தப்பட்டிருந்த, ஹவுரா எக்ஸ்பிரஸ், புதுடில்லியில் இருந்து இயக்கப்பட்ட, கிராண்ட் ட்ரங்க் - ஜி.டி., எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்கள், நேற்று காலை, சென்ட்ரல் வந்தடைந்தன.ஜம்மு -- காஷ்மீர் ஸ்ரீமாதா வைஷ்ணவதேவி கட்ராவில் இருந்து, 20ம் தேதி இயக்கப்பட்ட அந்தமான் எக்ஸ்பிரஸ், நேற்று காலை சென்ட்ரல் வந்தடைந்தது. பீஹார் மாநிலம், பாட்னாவில் இருந்து, சென்ட்ரல் வழியாக, கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு இயக்கப்பட்ட சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், மதியம் சென்ட்ரல் வந்தடைந்தது.

இந்த ரயில்களில் வந்த பயணியர் அனைவருக்கும், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் மாநகராட்சி சுகாதார துறையினரால், 'தெர்மல் ஸ்கேனர்' வாயிலாக, காய்ச்சல் சோதனை செய்யப்பட்டது.ரத்துயாருக்கும் காய்ச்சல் அறிகுறி இல்லாததால், அனைவரும் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.ரயில்கள் ரத்து நிலவரம் தெரியாமல், மேற்கு வங்க மாநிலம் ஹவுரா செல்ல வந்த பயணியருக்கு, ரயில் நிலையம் முன்பாக பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், 31ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள விபரத்தை தெரிவித்தனர். மார்ச் 31 வரை ரயில்கள் ரத்தால், அனைத்து ரயில் நிலையங்களும், மெட்ரோ ரயில் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X