பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணி

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை : 'கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில், தொண்டு நிறுவனங்கள் ஈடுபடலாம்' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடற்றோர் மாநகராட்சி காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.அதேபோல், பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த பயணியர், மாநகராட்சியின் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, மாநகராட்சி சார்பில், உணவு, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளில், மாநகராட்சியுடன் இணைந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வ முள்ள தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில், 'covid -19 volunteers & NGOs registration' என்ற இணைப்பில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உதவி பொருட்கள், தங்கள் வழங்கக்கூடிய பொருட்களின் விபரங்களை, 044 - 2538 4530, 2538 4520 என்ற, 24 மணி நேரம் இயங்கக்கூடிய தொலைபேசி எண்ணில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X