சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : மார் 24, 2020
Share
Advertisement

வீட்டில் பணம் திருட்டுசெங்குன்றம்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், பி.டி.மூர்த்தி நகர், வி.பி.சிந்தன் தெருவைச் சேர்ந்தவர், சத்யராஜ், 38. இவர், நேற்று முன்தினம் இரவு, காற்று வசதிக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து, துாங்கிவிட்டார். நேற்று அதிகாலை கண் விழித்தபோது, அவரது மணிபர்சில் வைத்திருந்த, 25 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பரோட்டா மாஸ்டருக்கு கத்திக்குத்துஅண்ணாசதுக்கம்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர், மாதவன், 45; பரோட்டா மாஸ்டர். இவர் நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர் சிவாவுடன், பொதுப்பணி துறை அலுவலகம் அருகே அமர்ந்து மதுபோதையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவா, இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து, மாதவனை குத்திவிட்டு தப்பிச் சென்றார். படுகாயமடைந்த மாதவன், ஓமந்துாரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்ணாசதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.கூலித்தொழிலாளி உயிரிழப்புதிருவொற்றியூர்: திருவொற்றியூர், கணக்கர் தெருவில், நேற்று காலை, அடையாளம் தெரியாத நபர், இறந்து கிடந்தார். திருவொற்றியூர் போலீசார், உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில், இறந்தவர் சேகர், 55. சாலையோரம் தங்கி கூலித்தொழில் செய்துள்ளார். குடிப்பழக்கம் அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு இறந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X