சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

நியூயார்க் : சீன அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா நோய் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இது தொடர்பாக சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.



latest tamil news




கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், கடுமையான நடவடிக்கைகள் வாயிலாக, பாதிப்பு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு, கடந்த, நான்கு நாட்களில், ஒருவர் மட்டுமே இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டபிள்யு.எச்.ஓ., எனப்படும், உலக சுகாதார அமைப்பு, சீனாவின் முயற்சிகளை பாராட்டியுள்ளது. அதன் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயேசஸ் கூறுகையில், ''கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவந்து, சீனா அடைந்துள்ள வெற்றி, இதர நாடுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.

சீனாவில், வைரஸ் தாக்கம் குறைவதற்கு, ஜி ஜின்பிங் அரசு, பல நடவடிக்கைகளை முன்னெடுத்தது. கடந்த ஜனவரியில், ஹூபய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில், வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தபோது, அந்நகர் முழுவதும் மூடப்பட்டது. அங்கு வசித்துவந்த, 1.1 கோடி மக்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஹூபய் மாகாணத்தில், பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சேவையை வழங்க, 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் அனுப்பிவைக்கப்பட்டனர்.


latest tamil news




வெறும், 10 நாட்களில், 2,300 படுக்கைகளுடன், இரண்டு புதிய மருத்துவமனைகளை கட்டிமுடித்து, உலக நாடுகளை, சீன அரசு திரும்பப் பார்க்க வைத்தது. வைரஸ் பாதிப்பை கண்டறிய, பொது இடங்களில் பரிசோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. சீன அரசின் இந்த நடவடிக்கைகளால், நாட்டில், வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan P - Chennai,இந்தியா
24-மார்-202011:58:23 IST Report Abuse
Anandan P சீனாவை பாராட்டும் WHO, ஏன் சீனா எடுத்தாதாக சொல்லப்படும் வைரஸ் பரவல் தடிப்பு வழி முறைகளை உலகிற்கு சொல்லக்கூடாது. உலகிற்கு வைரஸ் பரப்பிவிட்ட சீனாவிற்கு பொருளாதார தடையை விதிக்க படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
24-மார்-202008:56:08 IST Report Abuse
spr "வெறும், 10 நாட்களில், 2,300 படுக்கைகளுடன், இரண்டு புதிய மருத்துவமனைகளை கட்டிமுடித்து, உலக நாடுகளை, சீன அரசு திரும்பப் பார்க்க வைத்தது. வைரஸ் பாதிப்பை கண்டறிய, பொது இடங்களில் பரிசோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. சீன அரசின் இந்த நடவடிக்கைகளால், நாட்டில், வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது." இந்த வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டதா எனது தெரியாத நிலையில் அது குறித்துக் கருத்துத் தெரிவிப்பது அறிவீனம் ஆனால் அந்த சவாலையும் சீனா மற்றும் கொரியா எப்படி சமாளித்து மீண்டு வந்தது என்பதனையே நாம் சிந்திக்க வேண்டும் "உலகின் எந்த மூலையில் எந்த சம்பவம் நடந்தாலும், தனது தீர்ப்பை சொல்லத் தவறாத ஒரு நாட்டில், தங்களுடைய வல்லமை குறித்து வரம்புகளைத் தாண்டி பெருமையடித்துக் கொள்ளும் தலைவர்களைக் கொண்ட ஒரு நாடு, உலகின் வல்லாதிக்க நாடு எந்த அளவுக்கு அம்பலப்பட்டும், உள்நாட்டளவில் சிறுமைப்பட்டும் கிடக்கிறது என்பதை பலராலும் பார்க்க முடிகிறது." இது பி பி சி தமிழ் சொல்வது. உலகின் பெரும் வல்லரசான அமேரிக்கா ஒரு சாதாரண பஞ்சு உருட்டு குச்சிகள், கையுறைகள், கொரோனா பரிசோதனைக்குத் தேவைப்படும் சாதனங்கள் மற்றும் இதர பொருட்கள் உற்பத்தி கூட எதிர்பார்க்கப்பட்ட வேகத்தில் உற்பத்தி செய்ய முடியவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நிலவுக்கு மனிதனை அனுப்புவது அணு ஆராய்ச்சி என்றெல்லாம் பணத்தை, நேரத்தைச் செலவிட்ட அமெரிக்க அரசு வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கு சீனாவையே பெரிதும் நம்பியிருந்தது இப்பொழுது வெளிப்படையாகத் தெரிகிறது "முன்னணி சேவையாளர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களிடம் மன்றாடி, கட்டணங்களுக்கு விலக்கு தருதல், பரிசோதனைகளுக்கும் காப்பீட்டுத் தொகை வழங்குதல் ஆகியவற்றுக்கு தற்போதைய நிர்வாகம் சம்மதிக்க வைக்க முயற்சிக்கும் என்பது மிகையான கற்பனையாக இருக்காது............பரிசோதனை வசதிகள் கிடைத்தாலும், பலருக்கும் அதற்கான செலவை ஏற்க முடியாது - நீங்கள் காப்பீடு செய்திருக்காவிட்டால், விளிம்பில் வாழ்வதாக அர்த்தமாகும் நாடாக (அமேரிக்கா) உள்ளது." இது பி பி சி தமிழ் செய்தித்தாள் சொல்வது. இதே நிலையைத்தான் நம் மத்திய அரசும் முனைந்து செயல்படுத்துகிறது மருத்துவக் காப்பீடு பண முதலைகளுக்கு வருமான தரும் மனிதாபிமானத்தை விலைக்கு விற்கும் செயல். ஆதாயம் ஈட்டாத பல நிறுவனங்களை இன்னமும் வைத்துக் கொண்டு அதற்கு செலவழிக்கும் தொகையை ஆதாயம் கருதக் கூடாத மருத்துவம், கல்வி, நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு ஆகிய பணிகளுக்கு அரசு செலவிட வேண்டும் மக்களை அவரவர் திறமைக்கேற்ப சுயமாக வருமானம் ஈட்ட வாய்ப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் வாழ்வில் அன்றாடம் தேவைப்படும் அடிப்படைப் பொருட்களை குடிசைத் தொழிலாக உற்பத்தி செய்யாத ஒரு நாடு முன்னேற வாய்ப்பே இல்லை ஆனால் இங்கு பங்குச் சந்தையில் விளையாடும் பலருக்கு இந்த உண்மை புரிவதில்லை முதலீடுகள் அனைத்தும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை வைத்தே பலன் தருகிறது அது வெறும் வாக்குறுதி எப்பொழுது வேண்டுமானாலும் காற்றில் ஆவியாகிப் போகும் கொரோனா சொல்லிக் கொடுக்கும் பாடம் இதுதான் மாநில அரசு திருப்பூர் பின்னலாடைத் தொழிலதிபர்களை இந்தக் கையுறை, முகமூடி போன்றவற்றை உற்பத்தி செய்யத் தூண்ட வேண்டும் அதற்கான முதலீட்டை தருவதோடு அரசே வாணங்கிக் கொள்ளவும் வசதிகளை போர்க்கால அடிப்படையில் உருவாக்க வேண்டும் தனிமைப்படுத்துவது மட்டுமே தீர்வாகாது அவசியமானால் சீனா மற்றும் கொரியாவை உதவிக்கு அழைக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
chander - qatar,கத்தார்
24-மார்-202008:43:24 IST Report Abuse
chander உலகம் முழுவதும் கொரோனா பரப்பிவிட்டு வாட்டி எடுக்கும் சீனாவுக்கு பாராட்டு இது சுகாதார துறையா அயோக்கிய அசுத்த துறையா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X