சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'தகவல் ஆணைய உத்தரவை செயல்படுத்த வழிவகை இல்லை'

Added : மார் 24, 2020
Share
Advertisement

வணிக வளாகங்களில், வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் குறித்து, மாநில தகவல் ஆணைய உத்தரவை செயல்படுத்த, சட்டங்களில் வழிவகை இல்லை என, சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

சென்னையில் தனியார்வணிக வளாகங்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த வளாகங்களுக்கு, வாகனங்களில் செல்வோரிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.பெரும்பாலான வணிக வளாகங்களில், வாகன நிறுத்துமிட கட்டணங்களை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காதா என்ற ஏக்கம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில், மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் குறித்து, பெரம்பூரைச்சேர்ந்த சமூக ஆர்வலர்பி.கல்யாணசுந்தரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார்.

இதற்கு உரிய பதில் கிடைக்காததால், அவர் மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு செய்தார். இதை விசாரித்த தகவல் ஆணையம், வாகன நிறுத்த கட்டண விஷயத்தில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டது.இந்த உத்தரவு தொடர்பாக, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், மாநில தகவல் ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:தகவல் ஆணைய உத்தரவில் குறிப்பிட்டபடி, தனியார் வணிக வளாகங்களில், வாகன நிறுத்தும் கட்டணம் குறித்து, நடவடிக்கை எடுக்க மாநகராட்சி சட்டங்களில் வழிவகை இல்லை.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிப்படை வசதி, சுகாதாரம் போன்ற பல்வேறு விஷயங்களில், மாநகராட்சியின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகவே, வணிக வளாகங்கள் உள்ளன. ஆனால், வாகன நிறுத்துமிட கட்டண விஷயத்தில் மட்டும், சட்ட ரீதியாக வழி வகை இல்லை என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X