தமிழ்நாடு

மெத்தனம்! யாருக்கு என்ன ஆனால் எங்களுக்கென்ன ... கொரோனா விபரீதத்தை உணராமல் அதிகாரிகள்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
மெத்தனம்!  யாருக்கு என்ன ஆனால் எங்களுக்கென்ன ... கொரோனா விபரீதத்தை உணராமல் அதிகாரிகள்

பெருங்களத்துார் : 'கொரோனா' பாதிப்பை தடுக்க, கிருமி நாசினி தெளிக்காமல், பேரூராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக, புகார் எழுந்துள்ளது.

உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நோய் பரவாமல் தடுக்க, தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், ஈரோட்டில், 31ம் தேதி வரை, மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.தெருக்கள் தோறும், கிருமி நாசினி தெளிக்க, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி, புறநகரில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் பலவற்றில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் தெருக்கள் தோறும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஆனால், பெருங்களத்துார் பேரூராட்சி நிர்வாகம் பின்பற்றவே இல்லை.பெருங்களத்துார், குட்வில் நகர், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி, ஜி.கருணாகர பாண்டியன், 40, கூறியதாவது:பெருங்களத்துார் பேரூராட்சியில், ஓராண்டிற்கும் மேல், சுகாதார பணிகள் சுத்தமாக நடப்பதில்லை.நான்கு ஆண்டுகளில், நான்கு முறைக்கும் மேல், செயல் அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளதுடன், நிரந்தரமாக பேரூராட்சிக்கு செயல் அலுவலர் நியமிக்கப்படாததே இதற்கு காரணம்.கூடுதல் பொறுப்பாக, இப்பேரூராட்சி நிர்வாகத்தை கவனிக்கும் அதிகாரிகளும், வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துவதில்லை.இதனால், பல வார்டுகளில், பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.

குறிப்பாக, குட்வில் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், முறையான கழிவு நீர் கால்வாய்கள் இன்றி, கழிவு நீர் அனைத்தும், காலி மனைகளில் குளம் போல் தேங்கி கிடக்கிறது.இதில், இரைதேடி வரும் பன்றிகளால், பல்வேறு நோய் தொற்று ஏற்படுகிறது. தற்போது, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சுகாதார பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.குறைந்தபட்ச நோய் தடுப்பு நடவடிக்கையாக, கிருமி நாசினி கூட, தெருக்கள் தோறும் தெளிக்கப் படுவதில்லை.மேலும், நோய் தடுப்பதுகுறித்து, அரசு அறிவித்துள்ள எந்த உத்தரவுகளையும் பின்பற்றாமல், 'யாருக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன' என, மெத்தனமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

உயர் அதிகாரிகள் கவனித்து, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இது குறித்து, விசாரிக்க பேரூராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, அவர்களது மொபைல் எண், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.S.Balajrishnan - Salem,இந்தியா
25-மார்-202014:09:19 IST Report Abuse
P.S.Balajrishnan தயவு செய்து தூய்மை பணியாளர்கள் மீது குற்றம் சாட்டாதீர்கள். அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான். அவர்களும் தங்களை கொரானாவில் இருந்து காப்பாற்றிக் கொண்டு நாம் அலட்சியமாக எறியும் குப்பைகளையும் சுத்தம் செய்ய வேண்டிய கடமை உள்ளவர்கள் தான். அதில் சந்தேகம் வேண்டாம். நாம் எந்த அளவு இந்த நேரத்தில் அவர்களுக்கு ஒத்தாசையாக செயல் படுகிறோம்: தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இந்த நேரத்தில் துப்புரவு அதிகாரிகள் உதவியுடன் உதவி செய்ய பயன் படுத்திக்கொள்ள நாம் முற்படலாம். மேலும் 'நாங்கள் சட்டசபையை புறக்கணிக்கிறோம்: எங்கள் தொகுதி பணி செய்ய வேண்டும்' என்று ஓடிவந்தவர்களை அணுகி அவர்களையும் இணைந்து செய்ய சொல்லலாம். ஏற்கனவே ஏரி, குளம் ஆகியவற்றை தூர் வாரி பெரும் புகழ் பெற்றவர்கள் இதையும் செய்து வெகுஜன மக்களின் அன்பையும் ஆதரவையும் ஓட்டையும் பெறலாம்.
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
24-மார்-202021:54:50 IST Report Abuse
Varun Ramesh 30 - 35 வருட பணிக்காலம் முழுவதும் எந்தப்பணியும் செய்யாமலிருந்தால் ஊதியமும் செய்கிற வேலைக்கு லஞ்சமும் வாங்கிப்பழகிய வர்க்கம் இன்று திடீரென வந்துவிட்ட கொரோனாவிற்காக வேலை செய்யுமா?
Rate this:
Share this comment
Cancel
24-மார்-202017:44:45 IST Report Abuse
அருணா இந்த நேரம் இந்த நேரம் பணி செய்ய வேண்டாமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X