பொது செய்தி

தமிழ்நாடு

பீட்டர்ஸ் சாலையில் வீட்டு வசதி வாரியம் விறுவிறு

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை : சென்னை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில், 223 கோடி ரூபாயில், 17 மாடி வணிக வளாகம் கட்டுவதற்கான நிர்வாக பணிகளை, வீட்டு வசதி வாரியம் தீவிரப்படுத்தி உள்ளது.

சென்னையில், பட்டினப்பாக்கம், நந்தனம், ராயப்பேட்டை போன்ற இடங்களில் உள்ள வாடகை குடியிருப்புகளை இடித்து, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, வீட்டு வசதி வாரியம் திட்டமிட்டது. குழப்பம்இதில், வணிக ரீதியாக முக்கியத்துவம் உள்ள பகுதிகளில், மீண்டும் குடியிருப்புகள் கட்டுவதில் குழப்பம் ஏற்பட்டது.ஏற்கனவே குடியிருப்புகள் உள்ள பகுதிகளில், புதிதாக மீண்டும் குடியிருப்புகள் கட்டுவதைவிட, அந்த நிலங்களை, வணிக ரீதியாக பயன்படுத்தினால், வாரியத்துக்கு வருவாய் கிடைக்கும் என, ஆலோசிக்கப்பட்டது.

இதன்படி, சென்னை ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்பை, இடித்து கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டது.இந்த இடத்தில், புதிய குடியிருப்பு களுக்கு பதிலாக, வணிக வளாகம் கட்டினால், வருவாய் கிடைக்கும் என, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி, இங்கு, மூன்று அடித்தளம், தரைதளம் மற்றும் 17 தளங்கள் கொண்ட வணிக மற்றும் அலுவலக வளாகம் கட்டுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், 223 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளது. சாத்தியக்கூறு ஆய்வு முடிக்கப்பட்டு, தற்போது, கட்டுமான பணி, மேலாண்மைக்கான நிறுவனத்தை நியமிக்கும் நடவடிக்கைகளை, வீட்டு வசதி வாரியம் துவங்கியுள்ளது.'நோட்டீஸ்'இதற்கான தேடல், இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பீட்டர்ஸ் காலனி குடியிருப்பில் உள்ளவர்களை காலி செய்ய, விரைவில், 'நோட்டீஸ்' அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை, வாரிய அதிகாரிகள் விரைவுபடுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X