பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா' திருமண மண்டபம் ஆண்டு வாடகை

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை : சென்னை, அம்பத்துார்,- அயப்பாக்கம், ஆவடி,- பருத்திப்பட்டு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள, 'அம்மா' திருமண மண்டபங்களுக்கான குறைந்தபட்ச ஆண்டு வாடகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு குறைந்த விலையில், வீடுகள் கிடைக்க, வீட்டுவசதி வாரியம் துவங்கப்பட்டது. ரூ.50.53 கோடிஇதன் தொடர்ச்சியாக, மக்கள் நியாயமான கட்டணத்தில், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த இடம் வழங்க, 'அம்மா திருமண மண்டபம்' கட்டும் திட்டம் உருவாக்கப் பட்டது.இதன்படி, சென்னை யில் வேளச்சேரி, கொரட்டூர், திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்துார்,- அயப்பாக்கம், ஆவடி, பருத்திப்பட்டு, மதுரை,- அண்ணா நகர் ஆகிய இடங்களில், அம்மா திருமண மண்டபங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

இதற்காக, 50.53 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இதில், மதுரையில், 'அம்மா' திருமண மண்டபம் திறக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி மண்டப பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.அயப்பாக்கம், பருத்திப்பட்டு அம்மா திருமண மண்டபங்கள், விரைவில் திறக்கப்பட உள்ளன.இந்த மண்டபங்களை, ஆண்டு வாடகை அடிப்படையில், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வாரியம் முடிவு செய்துள்ளது. ஏல அடிப்படைஇதன்படி, அயப்பாக்கம் மண்டபத்துக்கு, 2.62 கோடி ரூபாயும், பருத்திப்பட்டு மண்டபத்துக்கு, 2.29 கோடி ரூபாயும் குறைந்தபட்ச ஆண்டு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பொது ஏல அடிப்படையில், இதற்கான நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு ஏலம் எடுக்கும் நிறுவனங்கள், நிகழ்ச்சிகளுக்கு எந்த அளவில் வாடகை நிர்ணயிக்கும் என்பது அடுத்த சில மாதங்களில் தெரியவரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X