கொரோனா பரவல்; பிரதமர் மோடியிடம் மம்தா வேண்டுகோள்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

கோல்கட்டா : கொரோனா பாதிப்பால் மேற்கு வங்கத்துக்கு வரும் அனைத்து விமானங்களையும் நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.



latest tamil news




உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா நோய் பரவுதலை தடுப்பதற்கும் கட்டுப்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. மாநிலத்தில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வலியுறுத்தப்பட்டதால், மாநிலம் மொத்தமாக மூடப்பட்டது. கோல்கட்டாவின் முனிசிபல் கார்ப்பரேஷனின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு, மால்டா, முர்ஷிதாபாத், நாடியா, மேற்கு பர்த்வான், வடக்கு டினாஜ்பூர் மற்றும் ஹவுரா மாவட்டங்களைத் தவிர வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி நகரங்களுக்கும் இந்த ஊரடங்கு பொருந்தும்.


latest tamil news




இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் மேற்கு வங்கத்திற்கு வரும் விமானங்களின் சேவையை நிறுத்த வேண்டும் என முதல்வர் மம்தா, பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டதாவது : கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டன. மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் கரோனா பரவுவதைத் தடுக்க மாநில அரசு தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மே.வங்கத்திற்கு, வெளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளால் நோய் ஆபத்து வந்து விடுமோ என்ற பயம் உள்ளதால் மாநிலங்களுக்கு வரும் அனைத்து விமானங்களையும் நிறுத்த வேண்டும். இதனால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரலாம். இது முழுமையாக மாநில நலன் கருத்தி விடுக்கப்படும் கோரிக்கை. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
24-மார்-202011:06:50 IST Report Abuse
Ram இவரெல்லாம் ஒரு ........
Rate this:
Share this comment
Cancel
Shanan -  ( Posted via: Dinamalar Android App )
24-மார்-202009:06:32 IST Report Abuse
Shanan பங்களாதேஷில் எல்லையை என்ன செய்யப் போகிறீர்கள்
Rate this:
Share this comment
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
24-மார்-202010:38:58 IST Report Abuse
Nallavan Nallavanமேடம் அந்தப்பக்கம் தொறந்தே வெச்சிருப்பாங்க ..... காத்து வரணும்-ன்னு ........
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Krishnaswamy - Puducherry,இந்தியா
24-மார்-202008:42:07 IST Report Abuse
Ramalingam Krishnaswamy எதிலும் எப்போதும் தான்தோன்றியாகப் பேசும் மமதை தீதிக்கு இப்போதுமட்டும் எப்படி விமானங்களைத் தம்மால் நிறுத்த முடியாமல் போனது ஓஹோ . . . விமானம் அக்காவை விட உயரத்தில் பறப்பதாலா . . . . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X