கொரோனா அச்சுறுத்தலால் இந்திய , சீன எல்லையை மூடியது நேபாளம்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

காத்மண்டு : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா மற்றும் சீனாவின் எல்லைகளை நேபாள அரசு மூடியுள்ளது.



latest tamil news




சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா நோய் தொற்று உலகின் பல நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய்க்கான தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா , பிரான்ஸ் போன்ற பல நாடுகளும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகளிலும் எல்லைப்பகுதிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா பரவுதலை கட்டுக்குள் வைக்க மாநிலங்களின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாள நாட்டு அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் சீனாவின் எல்லைகளை வரும் மார்ச்.,29 வரை தற்காலிகமாக மூடியுள்ளதாக தெரிவித்துள்ளது.


latest tamil news




இது தொடர்பாக நேபாளத்தின் நிதியமைச்சர் யுவராஜ் கத்திவாடா கூறுகையில், ஆசியாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள நாடுகள் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கவும் முன்னெச்சரிக்கைக்காகவும் நேபாளத்தின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. மக்களின் எல்லை கடந்த போக்குவரத்தால் நேபாளத்தில் கொரோனா பரவுவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது.. எனவே இந்தியா, சீனாவுடனான எல்லைகளை நேபாள அரசு தற்காலிகமாக மூடுகிறது. மார்ச் 23 முதல் மார்ச் 29 வரை இந்த தடை நீடிக்கும். எல்லைகள் மூடப்பட்டாலும் சரக்கு போக்குவரத்து தொடரும்.

மேலும் இந்தியாவுடனான சுமார் 1,800 கி.மீ திறந்த எல்லையை நேபாளம் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24-மார்-202004:45:16 IST Report Abuse
 nicolethomson தவறே இல்லை ஆனா மக்களின் வாழ்வாதாரத்தை பாருங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X