அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பரிசோதனை மறுப்பா?

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
coronavirus,corona,America,US,Trump,கொரோனா,வைரஸ்,அமெரிக்கா,டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில், 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, 'கொரோனா' வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை, 545 பேர் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயார்க் மாகாணங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதால், இங்கு வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில், வெளிநாடுகளைச் சேர்ந்த, ஒரு கோடிக்கும் அதிகமானோர், முறையான ஆவணங்கள் எதுவுமின்றி சட்டவிரோதமாக வசிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு, கொரோனா அறிகுறி இருந்தாலும், முறையான ஆவணங்கள் இல்லாததால், மருத்துவமனைகளில் பரிசோதனை நடத்த, டாக்டர்கள் மறுப்பதாக தகவல் வெளியானது; இதை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார்.


latest tamil news




இது குறித்து டிரம்ப் கூறியதாவது: சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்கள் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் என்பதற்காக, கொரோனா அறிகுறி இருப்பவர்களை, அவர்களது சொந்த நாடுகளுக்கு அப்படியே திருப்பி அனுப்ப மாட்டோம். சட்டவிரோதமாக வசிப்பவர்கள், குடியேற்றத் துறை அதிகாரிகளை அணுகி, தங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதை கூறினால், அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
24-மார்-202009:49:40 IST Report Abuse
R.Kumaresan வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வந்துகொண்டு சென்றுகொண்டிருக்கலாம், இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு சென்றால் அதிகமாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்ப மாட்டார்கள், ஏனெனில் இது வளரும் நாடுதான். அதிகமாக நோய் எங்கிருந்து எந்த நாட்டிலிருந்து வந்தது என்று பார்த்தாலே தெரிந்து விடும்.. நோயில்லாமல் இருக்கவேண்டும் இதைத்தான் மக்களும் பெரும்பாலும் விரும்புவார்கள், நோயில்லா காலங்களிலும் சற்றேறக்குறைய இதேதான் நடந்துகொண்டிருக்கும். இந்தியாவில் தமிழ்நாட்டில் மார்ச் 22 ஒருநாள் ஊரடங்கு உத்தரவு போட்டு நோய் கிருமிகள் வைரஸ் முழுமையாக ஒழிந்துவிடாது. அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட உத்தரவை அமெரிக்காவில் எந்தளவுக்கு செயல்படுத்துவார்கள் என்று தெரியாது.. R.Kumaresan.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-மார்-202007:29:18 IST Report Abuse
ஆரூர் ரங் அங்கும் திராவிஷர்களின் சி ஏ ஏ போராட்டம் தொடரட்டும் தனியொரு கள்ளக்குடியேறிக்கு உரிமையில்லைனெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவாங்க
Rate this:
Cancel
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
24-மார்-202007:01:08 IST Report Abuse
uthappa ஆவணங்களின்றி குடியேறியுள்ள வெளி நாட்டினருக்கு என்றால், இந்தியர்கள் என்றா பொருள்? இந்தியர்கள் ஆவணங்கள் இன்றி வர வாய்ப்பு இல்லையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X