கொரோனாவை தடுக்க உதவுங்கள்; தொழிலதிபர்களுக்கு பிரியங்கா அழைப்பு

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement

புதுடில்லி : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா, தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.



latest tamil news




உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.


latest tamil news




இது தொடர்பாக பிரியங்கா டுவிட்டரில் பதிவிட்டதாவது : தற்போது கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில், சுகாதார சேவையில் இந்தியா எப்போதும் இல்லாத அளவிற்கு மாபெரும் சுமையை சந்தித்துள்ளது. எங்கள் தேசத்துக்கும் உலகத்துக்கும் நெருக்கடியான இந்த நேரத்தில், கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொழிலபதிபர்களும், வணிக தலைவர்களும் முன்வர வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அவர்களின் ஆதரவு தேவை. தயவுசெய்து உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கொரோனா தடுப்புக்கு உபயோகிக்கும் மருந்துகளை தயாரிப்பதற்கும் , உபகரணங்கள் போன்றவற்றையும் வினியோகிப்பதற்கும் பல தொழில் நிறுவனங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றன. அதை போல் இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
24-மார்-202017:07:49 IST Report Abuse
Milirvan நீ, உங்க அம்மா, வாத்ரா எல்லாம் நாட்டை சுரண்டி சுட்ட காசை மொதல்ல கொடுக்குறது..?கான்கிராஸ்'ல இருக்குற கொழுத்த பணமுதலைங்கள கொடுக்க சொல்றது..? இந்திய கோவில்களை கொள்ளையடிச்சி இத்தாலி முதற்கொண்டு உலகமுச்சூடும் பதுக்கி வச்சிருக்கிற பணத்தை கொஞ்சம் கொடுக்குறது..?
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
24-மார்-202016:16:39 IST Report Abuse
Indhuindian இத்தாலி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது அங்கு சென்று குடும்பமாக சென்று அங்கு வாஷும் அவர்களுடைய உறவினர்களுக்கு சமூக சேவை செய்ய வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
24-மார்-202014:52:51 IST Report Abuse
நக்கல் மக்களுக்கு கொரோனா பாதிப்பு வந்தால் இவங்க குடும்பத்துக்கு ஏன் தொழிலதிபர்கள் உதவி பண்ணனும்... ஓ! எல்லாத்துக்கும் வாங்கியே பழக்கப்பட்ட குடும்பமா... நீங்க கோடு போட்டுடீங்க இனி எங்க தளபதி ரோடு போட்டுருவாரு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X