கொரோனாவை தடுக்க உதவுங்கள்; தொழிலதிபர்களுக்கு பிரியங்கா அழைப்பு| Dinamalar

கொரோனாவை தடுக்க உதவுங்கள்; தொழிலதிபர்களுக்கு பிரியங்கா அழைப்பு

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (26)
Share

புதுடில்லி : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா, தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.



latest tamil news




உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.


latest tamil news




இது தொடர்பாக பிரியங்கா டுவிட்டரில் பதிவிட்டதாவது : தற்போது கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில், சுகாதார சேவையில் இந்தியா எப்போதும் இல்லாத அளவிற்கு மாபெரும் சுமையை சந்தித்துள்ளது. எங்கள் தேசத்துக்கும் உலகத்துக்கும் நெருக்கடியான இந்த நேரத்தில், கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொழிலபதிபர்களும், வணிக தலைவர்களும் முன்வர வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அவர்களின் ஆதரவு தேவை. தயவுசெய்து உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கொரோனா தடுப்புக்கு உபயோகிக்கும் மருந்துகளை தயாரிப்பதற்கும் , உபகரணங்கள் போன்றவற்றையும் வினியோகிப்பதற்கும் பல தொழில் நிறுவனங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றன. அதை போல் இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X