பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வருவாய் துறையினர், சுகாதார பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராமங்களில் சுகாதார பணியாளர்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகளில் வருவாய், சுகாதாரத்துறை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.விழுப்புரம் கோர்ட் வளாகத்திற்குள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு தொடர்பான நபர்களை தவிர, பிற நபர்களை போலீசார் அனுமதி மறுக்கின்றனர். இதேபோன்று, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதார துறை சார்பில் கிருமி நாசினி கையில் தெளிக்கப்படுகிறது. மேலும், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் கை கழுவ புதியதாக தொட்டி அமைக்கப்பட்டு, சோப்பு வைக்கப்பட்டுள்ளது.இதேபோன்று, புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டதால், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் பஸ்கள் குறைந்த அளவு இயக்கப்பட்டது. இந்த பஸ்கள் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில எல்லையான மதகடிப்பட்டு அருகே தமிழக பஸ்களும், புதுச்சேரி பஸ்களும் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X