பொது செய்தி

தமிழ்நாடு

காவல் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி விழுப்புரத்தில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரத்தில் போக்குவரத்து பிசியான நேரத்தில், காவல் துறையினர் மேற்கொண்ட கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து மக்கள் சிரமப்பட்டனர்.கொரோனா வைரஸ் தொற்று பரவுவதையொட்டி, நேற்று முன்தினம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஊரடங்கு நடந்தது. இதையொட்டி, விழுப்புரம் நகரம் முழுவதுமே நேற்று முன்தினம் மக்கள், வாகனங்கள் போக்குவரத்தின்று வெறிச்சோடி காணப்பட்டது.இதையடுத்து, நேற்று காலை 8:00 மணி முதல் பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை துவங்கினர். இதில், பணிக்குச் செல்வோர் மட்டுமின்றி, பஸ்களில் வெளியூர்களுக்கு விரைந்து செல்லும் பயணிகள் பலரும் பயணித்தனர்.இந்த வேளையில், விழுப்புரம் பழைய பஸ் நிலையம், ரயில்வே மேம்பாலம் அருகே, மாதாகோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் துறை சார்பில் கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்காக கை கழுவும் முறைகளை ஆங்காங்கே 30 நிமிடம் வரை சாலைகளின் நடுவே நின்று கொண்டு செய்து காண்பித்தனர்.இதனால், சுட்டெரிக்கும் வெயிலில் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் செல்ல வழியின்றி அணிவகுத்து ஸ்தம்பித்து நின்றன. இந்த ஸ்தம்பிப்பால் குழந்தைகள், பெண்கள், வயதானோர் உள்ளிட்ட பலரும் நகர்ந்து செல்ல கூட வழியின்றி வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்பட்டனர்.போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதுச்சேரியில் நடத்தியது போன்று, சிக்னலில் காத்திருக்கும் அந்த நிமிடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம், அல்லது பொது இடத்தில் நடத்தியிருக்கலாம். சாலையின் நடுவே நடத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X