தள்ளிப்போகிறது டோக்கியோ ஒலிம்பிக்: ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020
Share
Advertisement
coronavirus,olympics,japan,TokyoOlympics,கொரோனா,ஒலிம்பிக்,ஒத்திவைப்பு

டோக்கியோ: 'திட்டமிட்டபடி ஒலிம்பிக் துவங்கினால், எங்களது வீரர், வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம்,' என கனடா, ஆஸ்திரேலியா தெரிவித்தன. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.

ஜப்பானின் டோக்கியோவில் வரும் ஜூலை 24 - ஆக. 9ல் ஒலிம்பிக் விளையாட்டு நடக்கவுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், ஒலிம்பிக் போட்டிக்கான அனைத்து தகுதிச்சுற்றுகளும் ரத்தாகின. வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து நட்சத்திரங்கள் உட்பட அந்த நாடுகளின் ஒலிம்பிக் கமிட்டியும் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இருப்பினும் திட்டமிட்டபடி ஒலிம்பிக் நடக்கும் என கூறப்படுகிறது.


விலகலால் நெருக்கடி:


இதனிடையே டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க மாட்டோம் என கனடா, ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதுகுறித்து கனடா ஒலிம்பிக், பாராலிம்பிக் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், 'எங்களது நட்சத்திரங்கள், உலக மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை தவிர வேறு ஒன்றும் முக்கியம் இல்லை, ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும்,' என தெரிவித்துள்ளது.

கனடா அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டியும் அறிக்கை வெளியிட்டது. இதில், 'இப்போதுள்ள சூழலில் எங்களது விளையாட்டு நட்சத்திரங்களை சொந்த மண்ணிலும், அன்னிய மண்ணிலும் ஒருங்கிணைக்க முடியாது. அவர்களது உடல் நலனிலும், சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பிற்கும் தான் முக்கியத்துவம் தரவேண்டும்,' என தெரிவித்துள்ளது.


வேறு வழியில்லை:


அடுத்தடுத்த நெருக்கடிகளால் தற்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி.,) மனம் மாறியுள்ளதாக தெரிகிறது. ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பது அல்லது அடுத்த ஆண்டு நடத்துவது குறித்து வரும் 4 வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தது.


latest tamil news




பிரதமர் அறிவிப்பு:


ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பார்லிமென்டில் பேசுகையில், 'ஒலிம்பிக் விளையாட்டை முழுமையாக நடத்த விரும்புகிறோம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஒருவேளை சிக்கல் ஏற்பட்டால் நமக்கு வேறு வழியில்லை. வீரர், வீராங்கனைகளின் உடல்நலன் தான் முக்கியம் என்ற ஒலிம்பிக் தத்துவத்தின் படி, தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். மற்றபடி ஒட்டுமொத்தமாக ரத்து செய்யும் திட்டம் இல்லை,' என்றார்.

ஜப்பான் பிரதமரின் அறிவிப்பை அடுத்து திட்டமிட்டபடி ஒலிம்பிக் துவங்குவது சந்தேகம் தான். இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X