பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடு மற்றும் மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் விபரம் தெரிவிக்க அறிவுறுத்தல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடு மற்றும் மாநிலங்களில் இருந்து வந்தோர் அவசர கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டுமென, கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தோர் உடனடியாக, கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146- 1077, 223265 மற்றும் மாவட்ட தொற்றுநோய் மருத்துவ அலுவலரின் தொலைபேசி எண் 9500293057 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.மேலும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்துள்ளோர், சுயமாகவே தங்களை 28 நாட்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு, பிற குடும்ப உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் நோய் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மேலும், அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது 28 நாட்கள் தங்கள் வீட்டில் தனிமைபடுத்தி கொள்ளாமல் இருப்பது கண்டறியப்பட்டாலோ தகுந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X