பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை கலெக்டர் தலைமையில் ஆலோசனை

Added : மார் 24, 2020
Share
Advertisement

விழுப்புரம்: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசியதாவது:தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மாலை 6:00 மணிக்கு மேல் அத்தியாவசிய கடைகளான பால், காய்கறி, இறைச்சி, மீன் கடைகள், மளிகை கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் இயங்க அனுமதி இல்லை. இதை நகராட்சி ஆணையர்கள் மற்றும் சம்மந்தபட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.மேலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் எந்தவொரு கடைகளிலும் கூட்டமாக நின்று பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க ஒரு மீட்டர் இடைவெளியில் தடுப்பு கட்டைகள் அமைக்க கடை உரிமையாளர்களிடம் நகராட்சி ஆணையர்கள் மற்றும் சம்பந்தபட்ட அலுவலர்கள் வலியுறுத்த வேண்டும்.அனைத்து உணவகங்கள், நடமாடும் உணவகங்கள் மற்றும் இதர சாலையோர நடமாடும் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். விடுதிகளில் தங்கும் மாணவர்களின் நலன் கருதி பார்சல் சர்வீஸ் மூலம் உணவுகள் எடுத்து செல்ல மட்டுமே அனுமதிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்தியாவசிய அவசிய பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து பஸ்கள், ஆட்டோ, டாக்சி போன்ற வாகனங்கள் இயங்க அனுமதியில்லை. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உரிய முறையில் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X