கொரோனாவுக்கான அறிகுறிகளில் புதிதாக ஒன்று: பிரான்ஸ் விஞ்ஞானிகள்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிதாக ஒரு அறிகுறியை கண்டுபிடித்துள்ளனர்.



latest tamil news



உலக நாடுகளில் கடும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் அறிகுறிகளாக கடுமையான காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல், போன்றவற்றை மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெரோம் சாலமன், கொரோனா தாக்கிய நோயாளிகளை ஆய்வு செய்த போது, வாசனை அறியும் திறனை இழப்பதும் கொரோனாவுக்கான அறிகுறி என கண்டுபிடித்துள்ளார். இந்த ஆய்வின் மூலம் ஏற்கனவே கொரோனாவுக்கான அறிகுறிகளுடன் இதுவும் சேர்க்கப்படுவதாக பிரான்ஸ் மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் விஞ்ஞானிகளின் இந்த ஆய்வின் முடிவை, பிரிட்டன் டாக்டர்களும் ஆமோதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
25-மார்-202017:57:20 IST Report Abuse
Endrum Indian ஐயோ?? ஐயோ?? அடுத்ததாக வரும் ஜப்பானில் ஆராச்சியாளர்கள் கண்டு பிடித்தது என்று ???நீங்கள் கட்டிலிலிருந்து எழும் போது முதுகில் வலி இருந்தால் , கீழே கால் பதிக்கும் போது பாதத்தில் வலிப்பது போல இருந்தால் கரோனாவின் தாக்கம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என்று.
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
24-மார்-202014:50:04 IST Report Abuse
venkatan இது ஆராய்ச்சியா? நான்70களில் 10ம் வகுப்பு அறிவியலில் சளிபிடித்தவனுக்கு லேசாக செவித்திறனும்,ஸ்லேதுமப்படலம் வைரஸ் தாக்குகையில் நுகரும் உணர்வு அற்றுப்போகும். இவைகள் எல்லா தோற்றுக்களிலும் பொதுவனவைகள்.. மற்றபடி இது ஒரு ஆராய்ச்சி, அதை செய்தியாக எழுத ஒரு வேற்று வேலை.. ஹ்ம்ம்..கோரனோ படுத்தும் பாடு..எல்லோரையும் உளற வைக்கிறது.மற்றும் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று ஜனங்களை அலைமோத விடுகிறது பயமுறுத்துகிறது.
Rate this:
Share this comment
Cancel
24-மார்-202014:49:04 IST Report Abuse
நக்கல் கொரோனா வந்தவர்களுக்கு சளி, மூக்கடைப்பு இருக்கும் என்று சொல்லப் படுகிறது... அப்படி இருக்கும் போது அவர்களால் வாசனையை எப்படியும் உணரமுடியாது... இதுல என்ன புதுசா இருக்கு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X