பொது செய்தி

தமிழ்நாடு

பழுதான குடிநீர் சுத்திகரிப்பு கருவி

Added : மார் 24, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை மாநகராட்சி 3வது வார்டு மிளகரணையில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுதடைந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

ஆனையூர் பகுதியினர் கலெக்டர் வினய்யிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: மிளகரணையில் நிலத்தடி நீர் உப்பாக இருக்கிறது. இதனால் மாநகராட்சி சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன் அது பழுதானது. இதனால் குடிநீர் பெற முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.நிலத்தடி நீரை குடிப்பதால் மக்கள் கல் அடைப்பு போன்ற சிரமத்திற்குள்ளாகின்றனர்.மாநகராட்சி உதவி பொறியாளரிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சுத்திகரிப்பு கருவியை பழுது நீக்க உத்தரவிட வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X