சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கால்வாயில் மணல் திருட்டு விவசாயிகள் குற்றச்சாட்டு

Added : மார் 24, 2020
Share
Advertisement

மதுரை : உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டத்தில் மடைக்கு வரும் வாய்க்காலில் முறைகேடாக மணல் அள்ளப்படுகிறது என அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

நன்செய், புன்செய் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நாற்பதாண்டு கால போராட்டத்திற்கு பிறகு கடந்தாண்டு 58 கிராம கால்வாய்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வைகை அணையில் 67 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பும் போது இக்கால்வாயில் திறக்கப்படும்.ஆனால் ஏற்கனவே சில பகுதிகளில் இத்திட்ட சங்கிலி தொடர் கண்மாய்க்கு செல்லும் கால்வாய்கரைகள் பலவீனமாக இருப்பதால் கடந்தமுறை தண்ணீர்திறக்கப்பட்ட போது உடைப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் உசிலம்பட்டி கண்மாய் மடை வாய்க்காலில் மண்ணை அனுமதியின்றி சிலர்திருடுகின்றனர். இதற்காக கரைகளை சேதப்படுத்தி வழித்தடம் ஏற்படுத்தியுள்ளனர். கலெக்டர் வினய் ஆய்வு செய்து மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X