அரசியல் செய்தி

தமிழ்நாடு

சமூக வலைதளங்களில் கிண்டல்: சிதம்பரம்

Added : மார் 24, 2020 | கருத்துகள் (113)
Share
Advertisement
சென்னை: 'கொரோனா பாதிப்பை தடுக்க, நாடு முழுவதையும் 4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என நான் கூறியதற்கு, சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தனர்' என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: நாடு முழுவதையும், 2 முதல் 4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என, கடந்த ஒரு வாரமாக கூறி வருகிறேன். இதற்கு, சமூக வலைதளங்களில் என்னை
coronavirus,PChidambaram,twitter,சிதம்பரம்,கொரோனா,டுவிட்டர்

சென்னை: 'கொரோனா பாதிப்பை தடுக்க, நாடு முழுவதையும் 4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என நான் கூறியதற்கு, சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தனர்' என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: நாடு முழுவதையும், 2 முதல் 4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என, கடந்த ஒரு வாரமாக கூறி வருகிறேன். இதற்கு, சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்கின்றனர். இத்தாலியிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். கடும் நடவடிக்கை தான் கொரோனா பாதிப்பை தடுக்கும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


latest tamil news
தமிழக அரசுக்கு பாராட்டு


தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், தமிழக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை வரவேற்று அவர் பதிவிட்டதாவது: என் போன்றோரின் யோசனையை ஏற்று, மாநிலம் தழுவிய முழு ஊரடங்கை அறிவித்த, தமிழ்நாடு உட்பட்ட மாநில அரசுகளுக்கு என் பாராட்டுக்கள் மற்றும் நன்றி. முழு ஊரடங்கைக் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். முக்கியமாகப் பெரிய கிராமங்கள், பேரூர்கள், நகரங்கள், மாநகரங்கள் மற்றும் பெருநகரங்களில்செயல்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தயக்கம் காட்டினாலும் தமிழ்நாடு அரசு துணிவுடன் செயல்படவேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Rajendran Thangavel - Dindigul ,இந்தியா
30-மார்-202019:57:24 IST Report Abuse
Dr Rajendran Thangavel The intellectuals are not honoured in Tamilnadu. That is why the people run after thoughtless cine actors and have made two of them CMs of this State. Unless people care to look at the reality only the entertainers will rule the state. The reactions of the readers indicate that the intellectuals are not needed for today's politics. The whole state runs behind the foolish politicians.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
30-மார்-202018:15:06 IST Report Abuse
Tamilnesan இவரது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் திகாரில் அடைத்தால் இந்தியாவை விட்டு கொரான வெளியேறிவிடும். இந்த உண்மையை சொல்ல ஒரு நாதியில்லை, இந்தியாவில்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
29-மார்-202005:35:46 IST Report Abuse
meenakshisundaram கொரானாவால் வந்த நல்ல விஷயங்களில் ஒன்று -இந்தா ஆள் தினம் ஒரு கருத்து சொல்வது நின்று விட்டது,இருந்தாலும் சில channelkal இவரை அழைத்து பேட்டி காண்பதுவும் அதற்கு இவருக்கு 'payment கொடுப்பதுவும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X