சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா குறித்து வதந்தி 2 கல்லுாரி மாணவர்கள் கைது

Added : மார் 24, 2020
Share
Advertisement

கோபி : 'கொரோனா' குறித்து வதந்தி பரப்பிய, கல்லுாரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம், டி.என்., பாளையம், ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் செல்வம், 52; சுகாதார ஆய்வாளர் மனோகரன், 50; இவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் ஒரு தகவல் வந்தது. அதில், 'டி.என்., பாளையத்தில், கொரோனா தாக்கியதில், 24 பேர் பரிசோதனையில் உள்ளனர். யாரும் ஊருக்குள் வரவேண்டாம்' என குறிப்பிடப்பட்டிருந்தது.விசாரித்ததில், தகவல், உண்மைக்கு புறம்பானது எனவும், ஒரு தொலைக்காட்சி சேனலின் லோகோவை டவுன்லோடு செய்து, வைரஸ் பீதி பார்வர்டு செய்யப்பட்டதும் தெரிந்தது.

பங்களாப்புதுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் விசாரித்து, டி.என்., பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின், ௧௭ வயது மகன், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், 20, ஆகியோரை, நேற்று மாலை கைது செய்தனர். மைனர் வாலிபரை, கோவை கூர்நோக்கு இல்லத்திலும், கார்த்திகேயனை, கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும் அடைத்தனர். இருவரும் கல்லுாரி மாணவர்கள்.கொரோனா வைரஸ் குறித்து, வதந்தி பரப்பிய இருவரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு கலெக்டருக்கு, எஸ்.பி., சக்தி கணேசன் பரிந்துரைத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X