பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ.8 உயர்த்த அரசுக்கு அனுமதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ.8 உயர்த்த அரசுக்கு அனுமதி

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (30)
Share
coronavirus,Petrol,diesel,price,hike,பெட்ரோல்,டீசல்,விலை,உயர்வு

புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு ரூ.8 வரை உயர்த்திக்கொள்ள, மத்திய அரசு சட்டத்தித்திருத்தம் கொண்டுவந்து லோக்சபாவில் நிறைவேற்றியது.


latest tamil news



கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் நேற்றுடன் முடிக்கப்பட்டது. முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு திருத்தங்களுடன் நிதிமசோதாவை தாக்கல் செய்தார். லோக்சபாவில் நிதி மசோதா விவாதங்களின்றி நிறைவேற்றப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியின் உச்சவரம்பை, தலா ரூ.18 ஆக உயர்த்த மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 ஆகவும், டீசல் மீதான கலால் வரி தலா 4 ரூபாயாகவும் உள்ளது.


latest tamil news



இச்சட்ட திருத்தத்தின்படி, பெட்ரோல், டீசல் விலையை, லிட்டருக்கு ரூ. 8 வரை உயர்த்த மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X