பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா ஆபத்தை உணராத மக்கள் கூட்டம்!

Added : மார் 24, 2020
Share
Advertisement

மதுரை : கொரோனா பாதிப்பை தடுக்க தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நகரில் மளிகை, காய்கறி மற்றும் பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் காலை ரூ.10 க்கு விற்கப்பட்ட தக்காளி மாலை ரூ. 50க்கும் மேல் விற்கப்பட்டது. ரூ.40க்கு விற்ற சின்ன வெங்காயம், மாலையில் ரூ.70க்கும் மேல் விற்கப்பட்டது. இதுபோல் பல பொருட்களின் விலை மாலையில் ரூ.50க்கும் மேல் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது. பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்த போதும், கூட்டம் கூடினால் கொரோனா பரவும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாககூடி பொருட்களை வாங்கினர்.

ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்த இத்தாலியில் தற்போது கொத்துக் கொத்தாக கொரோனாவிற்கு மக்கள் மடிந்து வருகின்றனர். இனியாவது மக்கள் விழிப்போடு இருந்து வீட்டிற்குள் இருந்துகொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X