சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலுக்கு எதிராக வழக்கு

Added : மார் 24, 2020
Share
Advertisement

மதுரை : டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.மேலப்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலுக்கு எதிராக தாக்கலான வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

பேரையூர் எஸ்.மேலப்பட்டி தமிழ்செல்வி தாக்கல் செய்த மனு: டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தின் கீழ் எஸ்.மேலப்பட்டி ஊராட்சி உள்ளது. இதில் 10 வார்டுகள் உள்ளன. நான் 6 வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றேன். துணைத் தலைவரை தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் ஜன.,11 ல் நடத்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டார். நான் மனு செய்தேன். போதிய எண்ணிக்கையிலான (கோரம்) வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை எனக்கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ஜன.,30 ல் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானது. எனக்கும், என் ஆதரவு உறுப்பினர்களுக்கும் எதிர்தரப்பினர் மிரட்டல் விடுத்தனர். ஓட்டுச் சீட்டு இன்றி தேர்தல் நடத்த முயற்சி நடந்தது.எங்கள் தரப்பில் ஆட்சேபித்தோம். துணைத் தலைவராக மகாலிங்கம் வெற்றி பெற்றதாக அவசரகதியில் அறிவிக்கப்பட்டது. இதில் விதி மீறல் உள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துணைத் தலைவர் செயல்பட தடை விதிக்க வேண்டும். மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சி.சரவணன் அமர்வு மாநில தேர்தல் ஆணையம், மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X