பொது செய்தி

இந்தியா

'ஒற்றுமையின் சின்னம்': பிறந்த குழந்தைக்கு 'கொரோனா' பெயர்

Added : மார் 24, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
corona,Baby,name,SymbolOfUnity,UttarPradesh,கொரோனா,உபி,குழந்தை,பெயர்

கோரக்பூர்: உ.பி.,யில் பிறந்த பெண் குழந்தைக்கு, 'கொரோனா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியதற்காக இப்பெயர் சூட்டப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 499ஆக உள்ளது. நேற்று 3 பேர் உயிரிழக்க, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது, 103 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உ.பி., மாநிலம் கோரக்பூரில் உள்ள சோகவுரா கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, 'கொரோனா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோரின் சம்மதத்துடன், அவரது மாமா திரிபாதி என்பவர் இப்பெயரை சூட்டியுள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் கூறுகையில், 'உலகில் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று வரும் உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது. ஆனால் மக்களிடையே அது சில நல்ல பழக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர்த்து உலக மக்களை ஒன்றாக இணைத்துள்ளது. ஒற்றுமையின் சின்னமாக, தீமைகளை எதிர்த்து போராடுபவராக இக்குழந்தை இருப்பார்' என்றார்.

நெட்டிசன்களுடன் ஆதரவில், தற்போது இக்குழந்தை உ.பி., மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பிரபலமாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.RAMS -  ( Posted via: Dinamalar Android App )
24-மார்-202019:11:58 IST Report Abuse
C.RAMS என்னடா இன்னும் இந்த மாதிரி செய்தி வர்லையேன்னு பார்த்தேன் இதா வந்துருச்சல்ல...😄😄😄
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
24-மார்-202018:21:11 IST Report Abuse
Rasheel அந்த குழந்தையின் வாழ்க்கையயே பேர் மூலமா கெடுத்துவிட்டான்.
Rate this:
Cancel
raman - Madurai,இந்தியா
24-மார்-202016:06:13 IST Report Abuse
raman முட்டாள்தனமாக உள்ளது. அக்குழந்தை பள்ளிக்குச் செல்லும்போது , மற்றவர்கள் இப்பெயரின் அர்த்தத்தை சொல்லி கேலி செய்யும் போது,இதன் கொடூரத்தை உணரமுடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X