பொது செய்தி

இந்தியா

கொரோனாவிடம் மெத்தனம் ஏன்? இத்தாலி நிலை இந்தியாவிற்கு வேண்டாம்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (59)
Share
Advertisement
coronavirus,StayHomeIndia,covid19,coronaupdates,corona,கொரோனா,இந்தியா,வைரஸ்

மதுரை: சர்வதேச அளவில் கொலைவெறி நடத்தும் கொரோனாவிடம் மக்கள் காட்டும் மெத்தனம், இத்தாலி நிலையை இந்தியாவிற்கு கொண்டு வந்துவிடுமோ என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. ஆனால் மக்கள் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்கவில்லை. தமிழகத்தில் ஒரு நாள் மக்கள் ஊரடங்கில் ஒத்துழைத்தவர்கள், மறுநாளே வழக்கம் போல வெளியில் நடமாடத் துவங்கி விட்டனர்.


latest tamil newsமதுரையில் நேற்று வழக்கம் போல வாகனங்கள் அணிவகுப்பு நடத்தின. சந்தைகளில் கூட்டம் அலைமோதியது. கொரோனாவின் கொலை வெறி தெரிந்தும் மக்கள் மெத்தனம் காட்டுவது ஆச்சர்யம். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் கவலை தெரிவித்துள்ளன. தமிழக அரசு, மக்களை கட்டுப்படுத்த சட்டங்களை அமல்படுத்த துவங்கியுள்ளது. அதன் துவக்கம்தான் 144 தடை. இருப்பினும் 'நம் நாட்டில் தான் பெரிய அளவில் பாதிப்பில்லையே; பிறகு ஏன் தேவையற்ற நடவடிக்கை' என சிலர் அலட்சியம் காட்டுகின்றனர். இந்த அலட்சியம், அஜாக்கிரதை தொடர்ந்தால் தமிழகம், இந்தியா பெரிய அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும்.

ஏனென்றால், முதலில் கொரோனா தன் வெறியாட்டத்தை துவங்கிய சீனாவின் பாதிப்பை கண்டு சில நாடுகள் பாடம் கற்க தவறின. எச்சரிக்கையாக இல்லாத, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேரழிவை சந்தித்து வருகின்றன. துவக்கத்தில் இத்தாலி அரசும் நம் அரசைப்போன்று இருவார விடுமுறை நடவடிக்கையை கையில் எடுத்தது. இதை உணராத அந்நாட்டு மக்கள் சுற்றுலா, கேளிக்கை விடுதிகளுக்கு புறப்பட்டனர். பார்ட்டிகளில் பங்கெடுத்தனர்.

பாதுகாப்பிற்கான காலம் என்பதை மறந்து, கொண்டாட்டத்தில் குதித்தனர். விளைவு கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கினர். அவர்களைப் போன்ற அஜாக்கிரதை நமக்கு வேண்டாம். கொரோனா பாதிப்பை சர்வதேச பொது சுகாதார பேரிடராக உலக சுகாதார நிறுவனம் அறிவித்த பின்னும் மெத்தனம் காட்டுவது மடமை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


latest tamil news
இத்தனை கட்டுப்பாடு ஏன் அவசியம்:


உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள், இங்கே பட்டியலாக தரப்பட்டுள்ளது. பாருங்கள்... சீனா, இத்தாலி, ஈரான், ஜெர்மனி, அமெரிக்காவில் எத்தனை வேகத்தில் கொரோனா பரவியுள்ளது. இங்குதான் அந்நாட்டு அரசு, மக்களின் அஜாக்கிரதை ஒளிந்துள்ளது. இந்தியாவில் இத்தனை கெடுபிடி ஏன் என்று கேட்பவர்கள், இப்பட்டியலை பார்த்தால் நமது சமூகப் பொறுப்பை உணர முடியும்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
25-மார்-202012:09:58 IST Report Abuse
Rafi விழிப்புணர்வு பிரசாரங்கள் அவசியம்.
Rate this:
Cancel
Uma Shankar - Kuala Lumpur,மலேஷியா
25-மார்-202003:30:04 IST Report Abuse
Uma Shankar நான் அரசு சார்பா ஒன்னும் பண்ண மாட்டேன். முடிந்தால் நீ உன் வீட்டை காப்பாத்திக்கோ. என்கிட்டே வராதே. ஆனா எனக்கு நீ தான் முக்கியம். உயிரோடு இருந்தா ஒட்டு போட மட்டும் வெளியே வா.
Rate this:
Cancel
24-மார்-202017:31:41 IST Report Abuse
Usha Vasudeven நம் ஆரோக்கியம் நம் கையில். நாம் என்ன குழந்தைகளா. புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அதையும் மீறி அரசும் காவல் துறையும் எத்தனை பாடுபடுகிறது. Keeping your mind positive in a negative situation. Take care.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X