பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டமாக வராதீங்க டாக்டர்கள் அறிவுரை

Added : மார் 24, 2020
Share
Advertisement

கம்பம் : மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுடன், உடன் வருபவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்று மருத்துவ அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் சாதாரண புண் என்று சிகிச்சை வந்தாலும், அவருடன் 3 முதல் 4 பேர் வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் பணியாற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது. 'கொரோனா' பரவுவதை தடுக்க கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

எனவே அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்கென வரும் சாதாரண நோயாளிகள், தங்களுடன் ஒருவரை மட்டும் வைத்துக் கொள்ளலாம். அதிக நபர்களை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர். தங்களால் முடியும் என்றால் தனியாகவே வரலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X