பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டத்தொழிலாளர்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை: எண்ணிக்கை அதிகரிப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

தேனி : கேரளா செல்லும் தோட்டத்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க நுாறு நாள் வேலை திட்டத்தில் உடனே ஜாப் கார்டு(வேலை அட்டை) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீட்டுக்கு நுாறுநாள் வேலை வழங்கும் திட்டத்தில் தினமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். இத்திட்டம் முன் போல் இன்றி ஊராட்சிகளுக்கும், மக்களுக்கும் பயன்படும் நிலையான சொத்துக்கள் உருவாக்கப்படுகிறது. தடுப்பணை, மழைநீர் சேகரிப்பு, நீர் நிலை துார்வாருதல் பணிகள் நடக்கிறது.

கம்பம், போடி கேரள எல்லையை ஒட்டியுள்ள கிராம மக்கள் அதிகம் கூலி கிடைப்பதால் தோட்ட வேலைகளுக்கு சென்றுவந்தனர். கொரோனா பாதிப்பால் கேரளாவிற்கு செல்ல தடை ஏற்பட்டது. இதனால் வேலை வாய்ப்பு இன்றி தொழிலாளர்கள் முடங்கியுள்ளனர். கேரளாவிற்கு வேலைக்கு சென்றவர்களுக்கு நுாறுநாள் வேலை வழங்கப்படும் என மாவட்டநிர்வாகம் அறிவித்து.

இதன்படி கம்பம், போடி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் அதிகமானோருக்கு நுாறுநாள் வேலை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை வேலை செய்யாதவர்களுக்கு 'ஜாப் கார்டு 'பெறாமல் இருந்தால் உடனே வழங்கி வேலை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி நேற்று மாவட்டத்தில் 8 ஆயிரத்து 600 பேர் நுாறுநாள் வேலை திட்டத்தில் பணி செய்தனர். இது மற்ற நாட்களை விட 20 சதவீத தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.150 முதல் ரூ.200 வரை கூலியாக கிடைக்கும்.நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் நுாறு நாள் வேலை திட்டத்தில் பயன்பெற முடியாததால் வேலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X