பொது செய்தி

தமிழ்நாடு

கம்பமெட்டு வழியாக வாகனங்களில் வந்தவர்கள் தடுத்து நிறுத்தம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கம்பம் : கம்பமெட்டு சோதனை சாவடி வழியாக நேற்று காலை தமிழகப்பகுதிக்குள் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கேரளாவில் அதிகமாக உள்ளது. எனவே தமிழக அரசு உத்தரவுப்படி எல்லை மூடப்பட்டு, கடந்த 21 ம் தேதி காலை முதல் தேனி மாவட்டத்தில் கம்பமெட்டு, போடிமெட்டு மற்றும் லோயர்கேம்ப் வழியாக கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

நேற்று காலை கம்பமெட்டு சோதனை சாவடி வழியாக ஏராளமானவர்கள் தமிழகத்திற்கு வாகனங்களில் வந்தனர். அவர்களை போலீசார் அனுமதிக்காமல் தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காய்கறி வாகனங்கள், மருத்துவ சிகிச்சைக்கு வந்தவர்களின் வாகனங்களை மட்டும் அனுமதிக்க கோரிக்கை எழுந்தது.

இதுதொடர்பாக உயர்அதிகாரிகளின் அனுமதி பெற்று டாக்டர்களின் பரிசோதனைக்கு பின்னரே அவர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஏல விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கேரள சோதனை சாவடியில் பணியிலிருக்கும் அதிகாரிகளும், தமிழக அரசின் நடவடிக்கை குறித்து விளக்கி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X