பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'வாஷ் பேஷன்' வசதி

Added : மார் 24, 2020
Share
Advertisement

கூடலூர் : கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கார்டன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 'வாஷ்பேஷன்' வசதி செய்து தரப்பட்டது.

'கொரோனா' அச்சத்தால் தற்போது சிறிய காய்ச்சல் இருந்தாலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் வகையில் கார்டன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 'வாஷ்பேஷன்' அமைத்துத் தரப்பட்டது. இதனை நேற்று ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன் துவக்கி வைத்தார். சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக கைகளைக் கழுவிய பின் உள்ளே செல்லவும், சிகிச்சை முடிந்து வெளியேறும்போதும் கைகளைக் கழுவவும் ரோட்டரி சங்கத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர். துவக்க விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் முருகன், ரோட்டரி சங்க நிர்வாகிகள், மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கம்பம்: கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதை தடுப்பதில் கை கழுவுதல் முக்கிய பங்காற்றுகிறது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவில் க.புதுப்பட்டி பேரூராட்சியும், இங்குள்ள ஜே.ஆர்.எலக்ட்ரிக்கல் கடையும் இணைந்து மெயின்ரோட்டில் கை கழுவும் வசதியை செய்துகொடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி செயல்அலுவலர் சுப்ரமணி, ஜே.ஆர்.எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ரவி,பல்வேறு சமூக தலைவர்கள் பங்கேற்றனர். பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி வரும் போது, கைகளை கழுவி செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம்: பெரியகுளம் டி.எஸ்.பி., அலுவலகம் நுழைவு வாயிலில் நகராட்சி சுகாதாரப்பிரிவு மூன்று பெண் பணியாளர்கள், அங்கு வருவோரை கைகளை துாய்மைப்படுத்திவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையிலான போலீசார் புகார் கொடுக்க செல்லும் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு கைகழுவும் சோப்பு திரவம், தண்ணீர் கொடுக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X