தமிழ்நாடு

கேரளாவில் இருந்து திரும்பிய தொழிலாளர்கள் கண்காணிப்பு! 'கொரோனா' தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு சென்று திரும்பி தொழிலாளர்கள் குறித்த விபரங்களை சுகாதாரத்துறையினர், போலீசார் சேகரித்து வருகின்றனர். 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக பரிசோதனைக்குப்பின் அவர்களை கண்காணிக்கும் பணியும் நடக்கிறது.

ஆண்டிபட்டி சுற்றுப்பகுதிகளில் இருந்து சிறு வியாபாரம், தோட்ட வேலை, சலவைத்தொழில், கட்டட வேலைகளுக்கு பலரும் கேரளா இடுக்கிமாவட்டம் மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வது வழக்கம். சில வாரங்கள் அங்கு தங்கி இருந்து வேலை செய்த பின் ஆண்டிபட்டி வந்து சில நாட்கள் தங்கி செல்வர்.

தற்போது 'கொரோனா' வைரஸ் தாக்கம் குறித்து அனைத்து பகுதியிலும் தீவிர விழிப்புணர்வு நடந்து வருகிறது. அதனால் தொழிலாளர்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் சில பகுதியில்' கொரோனா 'பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு வேலைக்கு சென்று ஆண்டிபட்டி பகுதிக்கு திரும்பி வந்த நபர்கள் குறித்த விபரங்களை சுகாதாரத்துறை, போலீசார் சேகரித்து வருகின்றனர்.

அதன்பின் அவர்களுக்கு ' கொரோனா' பாதிப்புக்கான அறிகுறிகள் உள்ளதா பரிசோதனை செய்யப்பட்டு கண்காணித்தும் வருகின்றனர்.

வருஷநாடு: வருஷநாடு அருகே மஞ்சனுாத்து கிராமத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் மும்பையில் வேலை செய்து வருகின்றனர். இதில் 50 பேர் நேற்று முன் தினம் சொந்த ஊருக்கு வந்தனர். இதையறிந்த குமணந்தொழு சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் மருத்துவக்குழுவினர் மஞ்சனுாத்து கிராமத்திற்கு சென்று 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக அவர்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி, இருமல் உள்ளதா என பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் வீட்டிலே தனிமைப்படுத்தி கண்காணிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X