பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடுகளில் இருந்து திரும்பியோர் 28 நாட்கள் வெளியில் வரத்தடை

Added : மார் 24, 2020
Share
Advertisement

தேனி : வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க தயார் நிலையில் உள்ளனர். வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு விமான நிலையங்களில் சோதனை செய்து அவர்கள் அளித்த தகவலின்படி நேற்றுவரை 23 பேர் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி டாக்டர்கள் கண்காணிக்கின்றனர்.

பொதுநலன் கருதி வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்பற்றி ஏதேனும் தகவல் அறிந்தால் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் உள்ள அவசர தொலைபேசி 1077, 04546- 261 093 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு இடது கையில் அடையாள முத்திரை இடப்பட்டுள்ளது. தங்கியுள்ள குடியிருப்புகளில் அடையாள வில்லை ஒட்டப்பட்டுள்ளது. இவர்கள் வீட்டை விட்டு எக்காரணம் கொண்டும் 28 நாட்கள் வெளியே வரக்கூடாது. பொது வெளியில் இவர்களை கண்டால் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ் வீட்டில் உள்ளவர்களிடமும் யாரும் நேரடி தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம்.

மாவட்டத்தில் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் யாரேனும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் வருகை தந்து தங்கியிருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். இந் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X