பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பரிசோதனை ஒத்திகை நிகழ்ச்சி

Added : மார் 24, 2020
Share
Advertisement

தேனி : தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ' கொரோனா' வார்டில் பரிசோதனை ஒத்திகை நடந்தது.

போடி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் காய்ச்சலுடன் வந்தவர் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் தேனி மருத்துவக்கல்லுாரிமருத்துவமனை தனிமை வார்டில் சேர்க்கப்பட்டார். 'ெஹல்ப் டெஸ்க்' மூலம் இவர் எந்த நாட்டிற்கு சென்றார் என்ற பயண விபரம் சேகரித்தனர். இவர் மற்றவரிடம் இருந்து ஒரு மீட்டர் தள்ளி இருக்கவும், முக கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவு பி.பி.இ எனும் (பெர்ஷனல் புரடெக்டிவிட்டி எக்யூப்மென்ட்) பாதுகாப்பு ஆடையணிந்த டாக்டர்கள் இவரை பரிசோதித்தனர்.

இதில் 'ஏ' பிரிவு நோயாளிக்கு சுவாச பிரச்னை இருந்தால் வெண்டிலேட்டருடன் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டார். சுவாசம், மூக்கு, தொண்டையில் மாதிரி எடுத்து 'கொரோனா' ஆய்வு மையத்தில் சோதித்தனர். முடிவை பரபரப்புடன் காத்திருந்தனர்.

முடிவு பாசிடிவ் என்றால் தீவிர சிகிச்சையும், நெகடிவ் ஆக இருந்தால் 14 நாட்கள் தனிமையில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவர். பி.பிரிவு நோயாளிகளான முதியோர், இதய, சர்க்கரை நோயாளிகள் , சி. பிரிவு நோயாளிகள் சாதாரண காய்ச்சல், இருமல் உள்ளோர் என பிரிக்கப்படுவர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இறுதியில் நோயாளி எவ்வாறு மருத்துவமனையில் கண்காணிக்கப்படுகிறார், என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை விளக்கும் மாதிரி ஒத்திகை என டாக்டர்கள் தெரிவித்தனர். இதில் கலெக்டர் பல்லவி பல்தேவ், டீன் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X