பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி பள்ளி வளாகத்திற்கு உழவர் சந்தை இடமாற்றம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

சின்னமனுார் : சின்னமனுார் வாரச்சந்தை வியாபாரிகளின் எதிர்ப்பால் நகராட்சி பள்ளி வளாகத்திற்கு உழவர் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது.'கொரோனா' தொற்று பரவாமல் தடுக்க அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகமாக மக்கள் வருகை தரும் சின்னமனுார் உழவர் சந்தை குறுகிய இடத்தில் செயல்படுவதால் இடமாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டது. நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள வாரச்சந்தை திடலில் தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கி, நேற்று கடைகள் திறக்கப்பட்டன. வாரச்சந்தை நடத்த தடை விதித்துள்ள நிலையில், அங்கு உழவர் சந்தை செயல்படுவதற்கு வாரச்சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறப்பு டி.ஆர்.ஓ., தியாகராஜன், நகராட்சி கமிஷனர் சியாமளா வாரச்சந்தை வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் உழவர் சந்தையில் 5 கடைகளும், அருகில் உள்ள நகராட்சி பள்ளி கட்டடத்தில் 5 கடைகளும் செயல்பட அனுமதி வழங்கி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X