பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் 71 பேர் கண்காணிப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

தேனி : தேனிமாவட்டத்தில் 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய 71 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இம் மாவட்டத்தில் 'கொரோனா' தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவோர் விபரங்களை பொது சுகாதாரத்துறையின் சேகரித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.அதன்படி கடந்த ஜன., முதல் வாரத்தில் இருந்து இதுவரை வெளிநாடுகளில் இருந்து 101 பேர் தேனி மாவட்டத்திற்கு திரும்பியுள்ளனர். அதில் 71 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

கண்காணிப்பில் சிறுவர்கள்:

தேனியில் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 4 பேரும், 5 வயது சிறுமி உள்ளிட்ட 20 பேர் கண்காணிப்பில் உள்ளனர். போடியில் 70 வயது முதியவர் உட்பட 15 பேரும், உத்தமபாளையத்தில் 2 பெண்கள் உட்பட 50 வயதிற்கு கீழ் உள்ள 15 பேர் கண்காணிப்பில் உள்ளனர். ஆண்டிபட்டியில் மூன்று வயது ஆண் குழந்தை, ஒரு வயது பெண் குழந்தை, 4 பெண்கள் உட்பட 18 பேரும், பெரியகுளத்தில் 23 வயது, 58 வயதுடைய 2 பெண்கள் உட்பட 50 வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள் என, 9 பேரும் என, 71 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இதுதவிர தொற்று இல்லாத காரணத்தினால் 21 பேரின் கண்காணிப்பு, சிகிச்சை தளர்த்தப்பட்டுள்ளது. நான்கு பேர் வெளிநாடு சென்று விட்டனர்.

தம்பதி மீது புகார்:

தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்த தம்பதி மஸ்கட்டில் இருந்து சமீபத்தில் தேனி திரும்பினர்.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக வீட்டில் வைத்து சுகாதாரத்துறையினால் கண்காணிக்கப்பட்டு பரிசோதனை நடந்தது. இந்நிலையில்' கொரோனா' தீவிரத்தை புரிந்து கொள்ளாமல், தம்பதிகள் அதிகாலையில் அங்கு 'வாக்கிங்', டீக்கடைக்கு செல்வதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து 'கொரோனா 'அவசர கால உதவி எண், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

வி.ஏ.ஓ., குணசேகரன், அவர்கள் வீட்டிற்கு சென்று வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்த கதவை தட்டியும் அவர்கள் வெளியில் வரவில்லை. இதுதொடர்பாக கண்காணிப்பு அதிகாரி, முத்துராஜ் டி.எஸ்.பி., யிடம் புகார் அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X