பொது செய்தி

தமிழ்நாடு

144 தடை உத்தரவு எதிரொலி: ஊர் திரும்ப குவிந்த மக்கள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கூடலூர் : தமிழகத்தில் இன்று மாலை 6:00 மணியிலிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்களால் லோயர்கேம்பில் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் தேனி மாவட்டத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கையாக கண்காணிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் இன்று மாலை 6:00 மணியிலிருந்து மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று மாலை எல்லைப்பகுதியான லோயர்கேம்ப் வந்தனர். இவ்வாறு வந்த அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் உள்ளதா என்ற சோதனை நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரிடமும் இருந்து ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை எண் பெற்றுக் கொண்டு இவர்கள் கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.லோயர் கேம்பில் இருந்து குமுளி வரை பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருப்பதால் இவர்கள் மலைப்பாதை வழியாக நடந்து செல்ல முயன்றனர். இவர்கள் குமுளி வழி செல்வதற்கு வாகன வசதியை போலீசார் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அங்கிருந்து பஸ்களில் சென்றனர். இதே போல் கேரளாவில் இருந்தவர்களும் தமிழகப் பகுதியில் உள்ள சொந்த ஊருக்கு அதிகம் வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X