காய்கறி கழிவுகளால் மார்க்கெட்டில் சுகாதாரக்கேடு

Added : மார் 24, 2020
Share
Advertisement

பெரியகுளம் : பெரியகுளம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அள்ளப்படாத காய்கறி கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் தென்கரையில் நகராட்சிக்கு உட்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட்டில் நுழைவுப்பகுதியில் காய்கறி கழிவுகள் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் இங்கு காலை, மாலையில் துப்புரவு பணி மேற்கொண்டு பிளீச்சிங் பவுடர் போடப்படும் என தீர்மானத்தின் படி, மார்க்கெட் பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

ஆனால் சுகாதாரம் மோசமாக உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், நகராட்சி காய்கறி கழிவுகளை அள்ளுவதில் மெத்தனம் காட்டி வருகிறது. தொற்றுநோய் பரவுவதற்குள் இதனை அள்ளி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X