பிச்சம்பட்டியில் பன்றிகளால் சிரமம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி : பிச்சம்பட்டி ஊராட்சியின் குடியிருப்பை ஒட்டிய பகுதியில் உலாவரும் பன்றிகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்த ஊராட்சியில் பிச்சம்பட்டி, முல்லையம்பட்டி, பிச்சம்பட்டி காலனி பகுதிகள் உள்ளன. ஊராட்சியின் மையத்தில் செல்லும் ஓடையை இப்பகுதியை சேர்ந்த சிலர் பன்றி வளர்க்கும் இடமாக பயன்படுத்துகின்றனர். பன்றிகளுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து பராமரிக்கின்றனர். தாம் போக்கில் சுற்றித்திரியும் பன்றிகள் குடியிருப்பை ஒட்டி உள்ள பகுதி, மெயின்ரோடுகளில் எந்நேரமும் உலா வந்து செல்கின்றன. அவற்றால் மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் என்பதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக இங்கு தொடரும் பன்றி வளர்ப்பை ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. குடியிருப்பை ஒட்டி வளர்க்கப்படும் பன்றிகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X