தமிழ்நாடு

கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை தேனியில் 120 படுக்கை கொண்ட சிறப்பு வார்டு

Added : மார் 24, 2020
Share
Advertisement

தேனி : கொரோனா காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேனியில் 120 படுக்கை கொண்ட சிறப்பு வார்டு தயாராகி வருகிறது.

கொரோனா பாதிப்பின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. கேரள எல்லையில் நான்கு இடங்களில் பரிசோதனை முகாம் அமைத்து அங்கிருந்து வருபவர்களை காய்ச்சல் உள்ளதா என பரிசோதித்து அனுப்புகின்றனர். அறிகுறி உள்ளவர்கள் அங்கேயே தனிமைப்படுத்தும் மையங்களில் வைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா காய்ச்சல் சிறப்பு வார்டு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேனி பழைய அரசு மருத்துவமனையை நேற்று காலை கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார். இம் மருத்துவமனை அரசு மனநல ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு தேவையான வார்டுகள், படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

இங்கு தனிமை சிறப்பு வார்டுகள் அமைக்கப்படுகிறது. இதில் 100 படுக்கைகள் சாதாரண காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். 12 படுக்கைகள் கொண்ட ஐ.சி.யு. வார்டாகவும், 2 அறைகள் வி.ஐ.பி.க்கள் சிகிச்சை அறைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இங்கு தண்ணீர் வசதி குறைவாக இருந்தது. தேனி நகராட்சி தினமும் 40 ஆயிரம் லிட்டர் சப்ளை செய்ய உத்தரவிட்டார்.சிறப்பு டாக்டர்கள் நியமிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிறப்பு வார்டு ஓரிருநாளில் செயல்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

சுறுசுறுப்பான கட்டுப்பாட்டு அறை:

கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற இலவச தொலைபேசிக்கு அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. பொதுமக்கள் காய்ச்சல் குறித்து ஆலோசனை, உதவிக்காகவும் அழைக்கின்றன. இந்த அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. தேவை ஏற்படின் ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகள் மீட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

விழிப்புணர்வு பிரசாரம்:

தேனியில் டீ கடை, ஓட்டல்கள், கடைகளில் தேவையின்றி கூட்டம் கூடுபவர்களை சுகாதார துறையினர் கலைந்து செல்ல கூறுகின்றனர். கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் போலீசார் மூலம் திருப்பி அனுப்பபப்டுகின்றனர். ஆட்டோ, வாகனங்களில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் வீதி, வீதியாக மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X