பொது செய்தி

தமிழ்நாடு

சொந்த ஊர் திரும்பும் தொழிலாளரை பரிசோதிக்க நடவடிக்கை தேவை

Added : மார் 24, 2020
Share
Advertisement

கன்னிவாடி : கொரோனா எதிரொலியாக, வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

கன்னிவாடி, செம்பட்டி, சின்னாளபட்டி, கொடைரோடு பகுதியில் போதிய மழையின்மையால் விவசாய பணிகள் குறைந்தது. இங்குள்ள தொழிலாளர்கள், திருப்பூர், கோவை, சென்னை மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு வேலைக்கு சென்று விட்டனர். இவர்கள் திருவிழா, முக்கிய நிகழ்வுகள், விசேஷங்களில் பங்கேற்க ஊருக்கு வந்துவிட்டு, பின்னர் வேலைக்கு சென்றுவிடுவர்.

தற்போது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் எதிரொலியால், வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இவ்வாறு ஊர் திரும்பும் தொழிலாளர்களை சுகாதாரத்துறையினர் பரிசோதிப்பது இல்லை என புகார் எழுந்துள்ளது. எனவே, கிராமங்களில் வசிக்கும் மக்கள் கொரோனா பீதியில் உள்ளனர். இதை தவிர்க்க, வெளிநாடு, வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு சென்று வந்தவர்களை பரிசோதிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

ரெட்டியார்சத்திரம் ஒன்றிய நிர்வாகி சக்திவேல் கூறுகையில்,''பஸ், ரயில் போக்குவரத்து இல்லாவிட்டாலும் பலர் டூவீலரில் சொந்த ஊர் திரும்பும், இவர்களை பட்டியலிடுவது சுலபம். இவர்களை கிராம சுகாதார செவிலியர்கள், நடமாடும் மருத்துவக்குழு மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X