பொது செய்தி

தமிழ்நாடு

சித்த மருத்துவமனையில் கபசுரக்குடிநீர் இலவசம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : கொரோனா முன்னெச்சரிக்கையாக, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவம் சார்பில் கபசுரக்குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க, மக்கள் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் வராமல் தடுத்தால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம். இதற்கு கபசுரக்குடிநீர் கைக்கொடுக்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

ஆடாதொடை, இலவங்கம், கற்பூரவல்லி, திப்பிலி, சிந்தில் கொடி, சிறுதேக்கு, சுக்கு, கடுக்காய் தோல், இலவங்கம், கோரைக்கிழங்கு உட்பட 15 வகையான மூலிகைகளை கொண்டு கபசுரக்குடிநீர் தயாரிக்கப்படுகிறது. 5 கிராம் கபசுரக்குடிநீர் பொடியை 200 மி.லி., தண்ணீரில் நன்கு காய்ச்சி 50 மில்லியாக சுருக்கி காலை, மாலை குடிக்கலாம். தினமும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கபசுரக்குடிநீர் குடிக்கவும், 15 மில்லி கிராம் பொடி இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் இதனை வாங்கி வீடுகளில் காய்ச்சி குடிக்கலாம் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X