சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி

Added : மார் 24, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : கொரோனா முன்னெச்சரிக்கையாக, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புகார் மனு பெட்டி வைக்கப்பட்டது.இந்தியா உட்பட உலக நாடுகளை 'கொரோனா' வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் பொதுமக்கள் அதிக அச்சத்துடன் உலா வருகின்றனர். அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், சுற்றுலாத்தலங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மார்ச் 31 வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.வழக்கமாக நடக்கும் குறைதீர் கூட்டங்கள், மக்கள் தொடர்பு மற்றும் அம்மா திட்ட முகாம் உட்பட அனைத்து கூட்டங்களும் மார்ச் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டது.பொதுமக்கள், அலுவலர்கள் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். சித்த மருத்துவத்துறை சார்பில் நிலவேம்பு, கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு htttp://gdp.tn.gov.in/online ல் விண்ணப்பிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X