சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி மீது தாக்கு

Added : மார் 24, 2020
Share
Advertisement

நிலக்கோட்டை : தொழிலாளி மீது தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி., பாலகுமார் உத்தரவிட்டார்.நிலக்கோட்டை அருகே மாலையகவுண்டன்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளராக மணிகண்டன் 40, என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தெளித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த மாலையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அருளானந்து சேசுராஜ், அவரை பணி செய்ய விடாமல் தடுத்து அசிங்கமாக பேசியதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். அங்கு அலைக்கழிக்கப்பட்டதால் நிலக்கோட்டை டி.எஸ்.பி., யிடம் புகார் செய்தார். விசாரித்த டி.எஸ்.பி., பாலகுமார் நடவடிக்கை எடுக்க அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் லாவண்யாவிற்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X