பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட உரிமையியல் நீதிபதி நியமனம் எப்போது

Added : மார் 24, 2020
Share
Advertisement

நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் காலியாகவுள்ள மாவட்ட முன்சீப் கோர்ட் பதவிக்கு புதியவரை விரைவில் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நிலக்கோட்டை மாவட்ட முன்சீப் கோர்ட் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. கோர்ட்டிற்கு சொந்தமான கட்டடம் பழுதானதால் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்குகிறது. 4 ஆண்டுகளாக புதிய கட்டடம் கட்ட அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களாக இந்த கோர்ட்டிற்கு நீதிபதியும் நியமிக்கப்படவில்லை. இதனால் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பொதுமக்களுக்கான வாரிசுச் சான்று, நிலப் பிரச்னைகள் சம்பந்தமான வழக்குகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. வாரிசு சான்று போன்று பல்வேறு அத்தியாவசியமான பிரச்சினைக்கு இந்த கோர்ட் உத்தரவு தேவைப்படுவதால் நிலக்கோட்டை மாவட்ட முன்சீப் கோர்ட்டிற்கு நீதிபதியை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X