பதக்கம் வென்ற வீரர்களுக்கு சீருடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதக்கம் வென்ற வீரர்களுக்கு சீருடை

Added : மார் 24, 2020
Share

திண்டுக்கல்: ''தேசிய அளவில் பதக்கம் பெற்றவர்கள் விளையாட்டு சீருடை பெற விண்ணப்பிக்கலாம்'' என, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி கூறினார்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2018-19 ல் தேசிய போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. தேசிய போட்டியில் தங்கம் வென்றிருந்தால் ரூ.6 ஆயிரத்திற்கு விளையாட்டு சீருடைகள், வெள்ளிக்கு ரூ.4 ஆயிரத்திற்கும், வெண்கலத்திற்கு ரூ.2 ஆயிரத்திற்கு விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட உள்ளது.

தகுதியுடையவர்கள் அதற்குரிய சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்களுடன் ஏப்.3 க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0451-2461162 ல் பேசலாம் என, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X